3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு:வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு:வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:45 PM GMT)

3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தொிவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய ஆதார சட்டம் ஆகிய 3 சட்டங்களை இந்தியில் மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்து அதனை மக்களவையில் தாக்கல் செய்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரிமினல் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சண்முகம், ராஜாராம், தன்ராஜ், பொன்சிவா, பிரின்ஸ்சோமு, ராம்பிரசாத், பாலகிருஷ்ணன், கந்தன், முத்துலிங்கம், அலாவுதீன், பாலாஜி, அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story