வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் மற்றும் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை வக்கீல் சங்க தலைவர்கள் கந்தசாமி, ராஜேந்திரன், நிர்வாகிகள் ராமராஜ் பாண்டியன், செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் பேசினார்கள்.

இதில் வக்கீல்கள் சாகுல் ஹமீது மீரான், பிரதாபன், ஆதிமூலம், ரமேஷ், லெனின், ஜெகன்ஸ்ரீநாத், குமாரவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story