கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2023 5:15 AM IST (Updated: 3 Sept 2023 5:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து திண்டுக்கல் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து திண்டுக்கல் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் வக்கீல் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, சங்க உறுப்பினரான ரமேஷ் என்பவரை அவதூறாக பேசிய பெண் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story