கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
கோர்ட்டுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இணைய வழியாக வழக்குகளை தாக்கல் செய்யும் இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று ராமநாதபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் சேக் இப்ராகிம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, துணை தலைவர் மாதவன், இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் மோகன்பாபு, மூத்த வக்கீல்கள் குணசேகரன், அழகுபாலகிருஷ்ணன், முருகபூபதி, நம்புநாயகம், அர்சத் உசேன், அப்துல் காலித் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story