சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

சேரன்மாதேவியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

முக்கூடலை சேர்ந்தவர் முத்துசரவணன் (வயது 25). இவர் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று ஒரு வழக்கு நிமித்தமாக சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது துணை சூப்பிரண்டு சுபகுமார், வக்கீல் முத்துகிருஷ்ணனை வெளியே போக சொன்னதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சேரன்மாதேவி நீதிமன்ற வக்கீல்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருதரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை வக்கீல்கள் கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story