கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோயம்புத்தூர்
கோவை
இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பிசி., இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை புதிதாக வடமொழி தலைப்புடன் தாக்கல் செய்து உள்ள மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வக்கீல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் நந்தகுமார், கோவை வக்கீல் சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். செயலாளர் திருநாவுக்கரசு, கோவை வக்கீல் சங்க முன்னாள் தலைவா அருள்மொழி, குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் குற்றவியல் வக்கீல் சங்க செயலாளர் ஹரீஷ், மற்றும் வக்கீல் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story