நாமக்கல்லில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு அனைத்து வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண் வக்கீல்கள் கலந்து கொண்டு மணிப்பூரில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story