நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்தும் இ-பைல் முறைக்கு மாற்றப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன் கூறுகையில், இ-பைல் முறையில் உள்ள சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக பொதுமக்களும், வக்கீல்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை தற்காலிகமாக 6 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அதற்குள் இதனை சரிசெய்து பொதுமக்களும், வக்கீல்களும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் இ-பைல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கைக்குழு இணை செயலாளர் காமராஜ், உறுப்பினர் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கருத்தபாண்டி, இந்திரா தேவி, சங்க பொருளாளர் ராஜா, வக்கீல்கள் கீழப்பாட்டம் பேச்சிமுத்து, பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story