வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம்


வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம்
x

பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் தாக்கப்பட்டார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். அந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், முன்னாள் செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா சம்பவ இடத்துக்கு வந்து வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். இதையடுத்து வக்கீல்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story