இலவம்பேடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா


இலவம்பேடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா
x

பொன்னேரி அருகே இலவம்பேடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய இலவம்பேடு கிராமத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் ரூ.36 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத், வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாபஞ்சாட்சரம், சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாளையம், ஊராட்சி துணை தலைவர் சித்ராரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story