கவர்னர் ஆர்.என்.ரவி உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


கவர்னர் ஆர்.என்.ரவி உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 7:28 AM GMT (Updated: 23 Nov 2022 8:01 AM GMT)

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

சென்னை,

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.


Next Story