இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம்


இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம்
x

இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அவரது ஆலோசனையின் பேரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், செந்தலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.


Next Story