முதியோர் நலன், பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
முதியோர் நலன், பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
திருப்பூர்
திருப்பூர்
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ஜே.ஜி.நகர் பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் முதியோர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் உணவுப்பொருட்கள், உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்ட உதவி மைய பெண் வக்கீல்கள் இதை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சட்ட உதவி மைய வக்கீல்கள் சோபனா, பாரதி, ஸ்ரீராதா, திங்களவள், அமுதா ஆகியோர் பங்கேற்று முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், அடிப்படை சட்ட உரிமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் முதியோர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story