சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
மயிலாடுதுறை அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்த மின்கம்பங்கள்
மயிலாடுதுறை தாலுகா கிழாய் ஊராட்சி சந்தன கருப்பு கோவில் அருகே மணல்மேடு சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களில் அடுத்தடுத்து வரிசையாக உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இந்த மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து வயலில் விழும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
அசம்பாவிதம் ஏற்படும்முன்
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை புகார் கொடுத்தும், இது வரையிலும் சீரமைக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.