கற்கின்ற கல்வி தான் நம்மை காப்பாற்றும்


கற்கின்ற கல்வி தான் நம்மை காப்பாற்றும்
x

நாம் கற்கின்ற கல்வி தான் நம்மை காப்பாற்றும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

நாம் கற்கின்ற கல்வி தான் நம்மை காப்பாற்றும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

வழிகாட்டுதல் முகாம்

அருப்புக்கோட்டையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. கணேசன் வரவேற்றார்.

முகாமில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி அறிவு வேண்டும் என்ற நோக்கில் நான் முதல்வன் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கினார்.

கல்வி தான் காப்பாற்றும்

கடந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில் 7,226 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தற்போது 91.8 சதவீதம் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். 580-க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேராமல் இருக்கின்றார்கள். அவர்களையும் கல்லூரியில் இணைத்து கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

வரும் காலங்களில் நாம் கற்கின்ற கல்வி தான் நம்மை காப்பாற்றும் என்பதனை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

உறுதுணை

கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முதல்- அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினராகிய நானும் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்,

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து சாதி சான்றிதழ்களை வழங்கினார். முகாமில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, துணைத் தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், பாலகணேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் டுவிங்கிளின் ஞானபிரபா, ஜெயகவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story