திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி விடுப்பு போராட்டம்


திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி விடுப்பு போராட்டம்
x

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஒரு நாள் பணி விடுப்பு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

பணி விடுப்பு போராட்டம்

தமிழகத்தில் வருவாய்த்துறையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும், ஊதிய உயர்வு, அரசு மட்டத்தில் நடத்திய பேச்சில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசாணைகள் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவதி

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின் போராட்டம் நடைபெற்றது. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை, அனைத்து நிலை அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பொது பணிகள் பாதிக்கப்பட்டன. தாலுகாகளுக்கு கோரிக்கைகளுடன் வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். தாலுகா அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய 3 தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story