அனைத்து வார்டுகளிலும் ரூ1 கோடி மதிப்பில் எல் இ டி விளக்குகள்


அனைத்து வார்டுகளிலும் ரூ1 கோடி மதிப்பில் எல் இ டி விளக்குகள்
x

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் ரூ1 கோடி மதிப்பில் எல் இ டி விளக்குகள் அவசர கூட்டத்தில் தீர்மானம்

கடலூர்

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் அவசரக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழிசங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமது யூனுஷ், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை முத்துகுமாரசாமி கோவில் அருகில் உள்ள திடலில் செயல்பட்டு வரும் வார சந்தையை வானுவர் சந்தில் அண்ணா மறுமலர் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய இடத்துக்கு இடமாற்றம் செய்வது, பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் ரூ.1 கோடி மதிப்பில் எல்.இ.டி. விளக்குகள் அமைப்பது, ரூ.40 லட்சம் செலவில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனா். முடிவில் துப்புரவு ஆய்வாளர் ஜோதி நன்றி கூறினார்.


Next Story