சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி அய்யநாடார்-ஜானகியம்மாள் கல்லூரியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப்பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் தமிழகத்தில் 100 இடங்களில் கல்லூரி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் புதுமைப்பெண் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது.
ஆர்வம், உழைப்பு, புதிய தேடல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக கவனத்தை செலுத்தினால் பொருளாதார ரீதியில் முழுமை அடைய முடியும். அதற்கு உறுதுணையாக இருப்பது தான் கல்வி. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், பெண்களுக்கான வாழ்வியல், பெண்கள் நலன், பெண்களுக்கான தலைமைப்பண்புகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பலர் பேசினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தங்கலட்சுமி, கல்லூரி முதல்வர் அசோக், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.