சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில், நெல்லை அரசு சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட உதவி முகாமை நடத்தின. நெல்லை மாவட்ட நீதிபதி சமீனா தலைமை தாங்கி, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பணிகள் குறித்து பேசினார். ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் முன்னிலை வகித்தார். அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பல்கலை வேந்தன் வாழ்த்தி பேசினார். செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அரசு உதவி வக்கீல் பரணிந்தர் சட்டம் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். நெல்லை அரசு சட்டக்கல்லூரி இணை பேராசிரியர் கிறிஸ்து ஜோதி, உதவி பேராசிரியர்கள் ராம்குமார், சண்முகசுந்தரகுமார், முத்துக்குமார், அம்பை மக்கள் நீதிமன்ற குழுமத்தின் வக்கீல்கள் ஜோயல் ஹென்றி, நவமணி, ரமேஷ், சசிகலா ராணி, ராதிகா, லட்சுமி, தயாள லட்சுமணன் ஆகியோரும் சட்ட ஆலோசனைகள் வழங்கினர்.


முகாமில் சொத்து பிரச்சினை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தை திருமணம், மோட்டார் வாகன விபத்து, ஜீவனாம்சம், விவாகரத்து, வரதட்சணை கொடுமை, வட்டி தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோனைகளும், சட்ட உதவிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர். ஏற்பாடுகளை நெல்லை அரசு சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சண்முகசுந்தரம், நாராயணி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story