சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

கோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு வனிதா தலைமை தாங்கினார். வக்கீல்கள் மோகன், பாலசுப்பிரமணியம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.


மேலும் மாஜிஸ்திரேட்டு வனிதா பேசுகையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்தும், சட்டஉதவி தேவைப்படும் நபர்கள் தயங்காமல் கோர்ட்டை அணுகி பயனடையலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து கடக்கோடு கிராம பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story