சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

செங்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி சட்டக்கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கி பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், வழக்கறிஞா்கள் சங்க தலைவா் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆசிரியர் பிச்சையா வரவேற்றுப் பேசினார். வக்கீல்கள் முத்துக்குமாரசாமி, ஆதிபாலசுப்பிரமணியன், சுடர்முத்தையா, பெண் போலீஸ் தங்கமயில் ஆகியோர் பேசினார்கள்.

முகாமில் வழக்கறிஞா்கள் சங்க இணைச் செயலாளா் கார்த்திகைராஜன், வக்கீல்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஆசிரியா் பிரேமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.


Next Story