சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி நீதிமன்றம் சார்பில் சிவகிரி அருகே உள்ள தலையணை பகுதியில் குடியிருக்கும் மழைவாழ் மக்களுக்காக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கி பேசுகையில், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. உங்களுடைய சட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தில் நேரில் வந்து மனு எழுதித்தரலாம். சில பிரச்சினைகளை வழக்குகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும். உங்கள் சார்பில் வாதாட இலவசமாக வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அனைவரும் சட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து அரசு பழங்குடியினர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் வக்கீல் செந்தில் திருமலைக்குமார், வனவர் குமார், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story