சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:46 PM GMT)

குண்டாடா அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நீதிமன்ற இலவச சட்ட உதவி மையம் சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி யாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா தலைமை தாங்கி பேசும்போது, மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் சட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். மேலும் சட்ட ரீதியான உதவிகள் பெறவும், குடும்ப பிரச்சினைகளுக்கு சட்ட பணிகள் குழுவை அணுகி சுமுக தீர்வு காண முடியும். குண்டாடா அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை அதிகளவில் சேர்த்து, தமிழோடு ஆங்கில மொழி கல்வியையும், அரசின் திட்டங்களையும் பெற்று பயனடைய வேண்டும் என்றார். ேமலும் குழந்தைகளுக்கு சட்டத்தில் வழங்கப்படும் உரிமைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பள்ளி இறுதியாண்டு படித்து முடித்து செல்லும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். முடிவில் சட்ட பணிகள் குழு அலுவலர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.


Next Story