சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

விருதுநகர் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி கிராமத்தில் போதை பொருள் தடுப்பு நாளை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை தாங்கிய மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் போதை பொருள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும் என கூறினார். சட்டப்பணிக் குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி, வக்கீல் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story