ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
ஆரணி
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் சார்பு நீதிபதி ஏ. தாவூத் அம்மாள் முன்னிலையில் நடந்தது. தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா கலந்து கொண்டு தலைமையேற்று பேசுகையில். ''மாணவிகளுக்கு சமூக சூழல், வீட்டு சூழல், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டிய நிலைமை இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு தற்போது தமிழக அரசு பெண் பிள்ளைகள் மேல் படிப்பு படிப்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 மாதா மாதம் வழஙம் திட்டத்தை தொடங்கி உள்ளது.
பெண் பிள்ளைகள் படிப்புக்காகவே அரசு மடிக்கணினி, இலவச மிதிவண்டி, சீருடை, பஸ் பாஸ் போன்றவர்கள் வழங்குகிறது. பள்ளி மாணவிகள் நான்கு பெட்டிகளை கண்டிப்பாக துறந்து விட வேண்டும் செல்போன் பெட்டி, லேப்டாப் பெட்டி, டிவி பெட்டி, டேப் பெட்டி இவற்றை நாம் துறந்தாலே அனைத்தும் சிறப்பாக அமையும்.
பெற்றோர்களை கண்டிப்பாக நீங்கள் மதிக்க வேண்டும். இன்று நீதிமன்றங்களில் பல்வேறு பிரச்சனைகள் வழக்குகள் வருகிறது பெற்றோர்களை மதிக்காத பிரிந்து வாழும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. அதற்காகத்தான் உங்களை பாதுகாக்க வேண்டி இது போன்ற சட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம், முதலில் மாணவிகள் தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க வேண்டும்'' என்றார்.
முகாமில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், அரசு வக்கீல்கள் கே. ராஜமூர்த்தி, கே.ஆர்.ராஜன், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன், கல்வியாளர் ஆர்.பி. ராமன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.