அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்


அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
x

அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலெட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் விதமாக கடந்த 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 13-ந் தேதி வரை வக்கீல்கள், சமூக சட்ட ஆர்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உதவி புரிவார்கள் என்றார்.

இந்தநிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கர்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் செல்வராஜ் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story