சட்ட விழிப்புணர்வு பேரணி
சட்ட விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9-ந் தேதி சட்டப்பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய சட்ட பணிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சட்ட விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருவள்ளூர் ஒருங்கிணைந்த கோர்ட்டில் தொடங்கி எம்.ஜி.ஆர் சிலை அருகே சென்று மீண்டும் நீதிமன்றத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், 200-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் போலீஸ் துறையினர் பங்கேற்றனர்.