சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை,
எதிர்க்கட்சித் துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஹரிதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 முறை கடிதம் கொடுத்தும் எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் எந்த மாற்ற நடவடிக்கையும் சபாநாயகர் மேற்கொள்ளவில்லை என எடப்பாடி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபாநாயகரும், சட்டப்பேரவை செயலாளரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.