கடன் வழங்கும் முகாம்


கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:22 AM IST (Updated: 18 Jun 2023 10:50 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் அய்யம்பெருமாள் மகாலில் இந்தியன் வங்கி சார்பில் வீட்டு கடன், அடமான கடன், வாகன கடன், தொழில் கடன் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு கடன் ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கி மண்டல துணை மேலாளர் செந்தில்குமார், மேலாளர்கள் (வீடு, அடமான கடன்) செல்வமணி, (தொழில் கடன்) திலீப் மற்றும் அனைத்து கிளை மேலாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்ற வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் அங்கேயே பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக கடன்தொகை அனுமதிக்கப்பட்டது. முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் மொத்தம் ரூ.50 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story