நிமோனியா காய்ச்சலுக்கு சிறுத்தைப்பூனை சாவு


நிமோனியா காய்ச்சலுக்கு சிறுத்தைப்பூனை சாவு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நிமோனியா காய்ச்சலுக்கு சிறுத்தைப்பூனை இறந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்டது சிங்கோனா எஸ்டேட். இங்கு முதல் பிரிவு 1-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்பூனை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இறந்து கிடந்த சிறுத்தைப்பூனையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் மலையாண்டி பணட்டணம் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தைப்பூனை வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த கிடந்தது 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்பூனை ஆகும். நிமோனியா காய்ச்சல் தாக்கியதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிறுத்தைப்பூனை இறந்துள்ளது என்று தெரிவித்தனர்.

சிறுத்தைப்பூனை நிமோனியா காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதால் வனப்பகுதியில் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்பதை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வனவிலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story