சிறுத்தை நடமாட்டம்


சிறுத்தை நடமாட்டம்
x

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை அருகே உள்ள புல்லூர் தடுப்பணை உள்ளது. இதன் அருகே வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது. இங்குள்ள பெரும்பள்ளம் கிராம பகுதியிலும், இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், மல்லானூர்-குப்பம் செல்லும் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அட்சத்துடன் உள்ளனர். மேலும் இந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அறிவுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story