கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்


கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்
x

கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது கரடி, யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் புகுந்து விடுகின்றன. மேலும் அவை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருவதுடன், அடிக்கடி மனித - வனவிலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு சிறுத்தை ஒன்று இரையைத் தேடி தேயிலை தோட்டத்தில் இருந்து சாலையைக் கடந்து சென்றது. சிறுத்தை சாலையைக் கடப்பதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் அந்த காட்சியை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சிறுத்தை தேயிலை தோட்டம் மற்றும் சாலைகளில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும்அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story