உரம், தண்ணீர் செலவு குறைவு: தென்னை நார் துகள்களில் காய்கறி சாகுபடி-தேசிய கூட்டமைப்பு தலைவர் தகவல்


உரம், தண்ணீர் செலவு குறைவு:  தென்னை நார் துகள்களில் காய்கறி சாகுபடி-தேசிய கூட்டமைப்பு தலைவர் தகவல்
x

தென்னை நார் துகள்களில் காய்கறிகள் சாகுபடி செய்தால் உரம், தண்ணீர் செலவு மிகவும் குறைவு என்று தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தென்னை நார் துகள்களில் காய்கறிகள் சாகுபடி செய்தால் உரம், தண்ணீர் செலவு மிகவும் குறைவு என்று தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700 தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து தென்னை மட்டையை வாங்கி, அதை நாராகவும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கால் மிதி என தென்னை நாரில் 200 வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தென்னை நார் துகள்களில் காய்கறிகள் சாகுபடி செய்யும் புதிய தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உரச்செலவு, தண்ணீர் செலவு குறைகிறது. இந்த தொழில்நுட்பத்தை வீடுகளில் பயன்படுத்தி கீரை வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம். இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:-

சாகுபடி

இந்தியாவை பொறுத்த வரை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டோம். மேலும் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் விவசாய துறையில் புதுமைகளை புகுத்தி ஆட்களை குறைத்து உரச்செலவு, தண்ணீர் செலவு இவற்றை குறைத்தால் தான் விவசாயம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும். ஆர்கானிக் முறையில் கீரை சாகுபடி செய்யப்படுகிறது.

மானியம்

ஒரு ரேக்கை வாங்கி வைத்து ஒவ்வொரு வீடுகளிலும் கீரை வகைகளை சாகுபடி செய்யலாம். வீட்டின் தினசரி கீரையை பூர்த்தி செய்யும் வகையில் 100 முதல் 200 கிராம் கீரையை விளைவிக்க முடியும். இதனால் தண்ணீர் 70 சதவீதம், உரச்செலவு 90 சதவீதம் மிச்சம் ஆகிறது. மேலும் ஆட்கள் கூலி இல்லாமல் இந்த விவசாயத்தை செய்ய முடியும். இதை பெரிய அளவில் செயவ்தற்கு சாத்தியக்கூறுகளும் உள்ளன.

6 முதல் 7 ஏக்கரில் என்ன விளைவிக்க முடியுமோ அதை ஒரு ஏக்கரில் விளைவிக்க முடியும். கீரை உள்பட 21 வகையான காய்கறிகளை விளைவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story