தமிழகத்தில் 2,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா
தமிழகத்தில் இன்று ஆயிரத்து 945 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று ஆயிரத்து 945 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,014 இல் இருந்து 1,945 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 431 இல் இருந்து 419 ஆக குறைந்தது.
தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,843இல் இருந்து 15,409 ஆக குறைந்தது. ஒரே நாளில் 2,379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story