அந்தந்த மாநில பிரச்சினைகளை அவர்களே பார்த்து கொள்ளட்டும் -தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா கவர்னர்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி.யில் மகளிர் தினவிழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி பொறுப்பு கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
13 ஆண்டுகள் கழித்து புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதல்-மந்திரி, நிதித்துறையுடன் நான் இணைந்து செயல்பட்டேன். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
விமர்சனம்
புதுச்சேரி கவர்னர் மீது எந்த விமர்சனமும் வராது, தெலுங்கானா கவர்னர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். புதுச்சேரியில் இரவல் கவர்னர் தான். இங்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நான் இரவல் கவர்னராக பணியாற்றவில்லை, இரக்கம் உள்ள கவர்னராக பணியாற்றுகிறேன். பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் முழுவதுமாக படித்ததை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே பாராட்டினார்கள்.
அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்துக்கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது. தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.