நாம் தமிழர் கட்சியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்


நாம் தமிழர் கட்சியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்
x

நாம் தமிழர் கட்சியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்

தஞ்சாவூர்

ி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள் என்று சீமான் கூறினார். .

பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பயம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையை கோவில் உள்ளே வைக்க வேண்டும். அவ்வாறு வைப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு உயிர் பயம் இருப்பதால் தான் ராஜராஜ சோழன் சிலையை பெரிய கோவில் உள்ளே வைக்க மறுக்கிறார்கள்.

நாடாளுமன்றத்துக்கு....

தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு மாற்று கட்சியாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு வானவன் மாதேவி என்று பெயர் சூட்டினார். கூட்டத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.


Next Story