ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம்


ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஆண்டாள் கோவிலில் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம். என்னை பா.ஜனதா மாநில தலைவர் நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் தலைமை நிலைய செயலாளர் மாணிக்க ராஜா, மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் குமார், பேரவை மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார், மாநில இளம் பெண்கள் பாசறை தலைவர் சங்கீத பிரியா மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

1 More update

Next Story