பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணி


பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரித்தல் போன்ற நோக்கத்தின் அடிப்படையில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது என்றார்.

300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இப்பேரணியில் மாவட்டத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story