மொழிப்போர் தியாகிகளை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம் - டிடிவி தினகரன் டுவீட்


மொழிப்போர் தியாகிகளை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம் - டிடிவி தினகரன் டுவீட்
x

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி டிடிவி தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.

அவர்களை போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம். 'மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்' என்பதை மறவாமல், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.



Next Story