ஆலயங்களை காப்போம் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு


ஆலயங்களை காப்போம் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
x

ஆலயங்களை காப்போம் மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் என்ற சிறப்பு மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரன் வரவேற்றார்.மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி., தளபதி எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநாட்டில் ஆலயங்களை பாதுக்காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். ஆலயங்களை காக்க வேண்டும் என்பதற்கு தான் இன்றைக்கு திருவட்டாறு ஆதிகேசவ கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த 18 ஆண்டுகளாக ஏற்பாடுகள் செய்த கோவிலில் 3 முறை களஆய்வு செய்து இந்த ஆண்டு குடமுழுக்கு நடத்தி முடித்த பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு.

788 கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சி இது.தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story