ஈரோடு கிழக்கு தொகுதியை வென்றெடுப்போம்- , அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்று முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்று முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், முன்னா2ள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈரோட்டில் உள்ள அனைத்து வளாச்சி திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான். கே.எஸ்.தென்னரசு மட்டுமே இந்த தொகுதியில் ரூ.500 கோடிக்கும் மேல் பல்வேறு பணிகளை செய்து கொடுத்திருக்கிறார். இதை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். எந்த நேரத்திலும் சென்று சந்திக்கக்கூடிய வேட்பாளராக தென்னரசு உள்ளார்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இரட்டை இலைக்கு சொந்தமாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் இன்னும் 13 நாட்கள் பிரசாரம் முழுவீச்சுடன் நடைபெறும். பிரசாரத்திற்கே இளங்கோவன் முழுமையாக வருவதில்லை. வேட்பாளர் வலிமையால், கட்சியின் வலிமையால், அ.தி.மு.க.வின் சாதனைகள் வலிமையால் ஈரோடு கிழக்கு தொகுதியை வென்றெடுப்போம்" என்றார்.