10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி வாலாஜா தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். முன்னாள் மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். வாலாஜா நகர வன்னியர் சங்க செயலாளர் ஜானகிராமன், பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர், வன்னியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் விநாயகம், குபேந்திரன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story