விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கோத்தகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி


கோத்தகிரி பூபதியூர் நடைபாதை பிரச்சினையில், கோர்ட்டு உத்தரவின்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரை கைது செய்யக்கோரி கோத்தகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு மக்கள் மேடை ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் பத்மநாதன் வரவேற்றார். மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஹால்துரை, உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட பொருளாளர் மணிகண்டன், ரத்ததான நண்பர்கள் குழு செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் திராவிட தமிழர் கட்சி நிர்வாகி பேராகிவனம் நன்றி கூறினார்.


Next Story