விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏரலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏரல்:
ஏரலில் புதிதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பொது மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் ஆகியவை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். ஏரல் நகர அமைப்பாளர் அஜித் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் செல்விஅய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெஸ்டின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏரல் ஜமாஅத் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜாகீர் உசேன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன், திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துராமன், ஏரல் முன்னாள் நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.