தர்ணாவில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது


தர்ணாவில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
x

தர்ணாவில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற பட்டியலின வாலிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யக்கோரியும் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாந்தோணிமலை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.


Next Story