விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:47 PM GMT)

தலைஞாயிறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுமா செல்வராசு தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர்கள் மன்னை ரமணி, நாகை சாதிக், துணை நிலை அமைப்பின் மாநில துணை செயலாளர்கள் தமிழ் பாண்டியன், மீரா சுல்தான், ஆனந்தபால், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச் சிலையை வெண்கல சிலையாக மாற்றுவது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி வருகிற 17-ந் தேதி அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி இனிப்பு வழங்குவது. திருமாவளவன் மணிவிழா நிறைவு பொதுக்கூட்டத்தை நாகை அவுரித் திடலில் நடத்துவது. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி ஆகிய 2 பேரும் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story