விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் ஜனநாயகம் காப்போம்-சிறுத்தைகள் அணிவகுப்பு என்னும் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த பேரணி தொடர்பான விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது.

மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கணேசன், தொழிலாளர் விடுதலை முன்னணி கார்மேகம், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடியில் பேரணியை நடத்துவது, பேரணி காலை 8 மணிக்கு குரூஸ்பர்னாந்து சிலை அருகில் தொடங்கி வடபாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் முடிப்பது, பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணை அமைப்பாளர் வனஜா, வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், மாவட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் செல்வக்குமார், மகளிர் விடுதலை இயக்கம் நிர்மலா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story