விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மாணவன் பூவலிங்கத்திற்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை உதவி கலெக்டர் புகாரி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்றனர்.

போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story