விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல்
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் 27 பேரை போலீசார் கைது செய்தனர்
விருத்தாசலம்
ரெயில் மறியல்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அம்பேத்கர் உருவ படத்தை நீதிமன்றத்தில் இருந்து நீக்க பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் நீதி வள்ளல், பூந்தோட்டம் தனசேகர், மேட்டுக்காலனி முருகன், ரமணா, ராகுல் உள்ளிட்ட பலர் சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து கோஷம் எழுப்பினர்.
27 பேர் கைது
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதை தெடர்ந்து, அவர்களில் 27 பேரை கைது செய்து அங்குள்ள ரெயில்வே மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.