விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம்
ஓமலூர்:-
ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன், அவருடைய தங்கை சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திராசெல்வி ஆகியோரை சில மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் சாமுராய்குரு தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் ராஜீவ் காந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மண்டல செயலாளர் இமயவரம்பன், மண்டல துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் தெய்வானை, ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணைச்செயலாளர் பாவேந்தன், மாநில துணைச்செயலாளர் மணி குமார்், தொகுதி துணை செயலாளர்கள் பாக்யராஜ், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story